Thursday, 5 March 2015

PenDriveஐ பாதுகாக்க Default Safe Removal வசதி !

சிலநேரங்களில் வேலை முடிந்ததும் Pen drive-வை USB Port லிருந்து எடுக்கும்பொழுது Safe Removal கொடுக்காமலேயே அப்படியே அதை உருவி எடுத்துவிடுவோம்.


சிலருக்கு Safe Removal கொடுக்காவிட்டால் என்ன நிகழும் என்று தெரிந்திருந்தும், அப்படிச் செய்யாமல் உடனடியாக USB Port லிருந்து Pen drive வை நீக்கிவிடுவார்கள்.

காரணம் வேலை செய்து முடித்துவிட்டு, உடனடியாக அதை எடுத்துவிட வேண்டும் என்ற எண்ணம்தான் காரணம்.

சரி.. இப்படி நீங்களாகவே Safe Remove கொடுக்காமல்,
தானாகவே Safe Remove கொடுப்பது எப்படி? 

என்பதைப் பார்ப்போம்.

1.     உங்களுடைய கணினியில் பெட்டிரைவை செருகவும்.
2.     இப்போது mycomputer Icon மீது ரைட் கிளிக் செய்யவும்.
3.     தோன்றும் பெட்டியில் Manage என்பதைச் சொடுக்கவும்.
4.     தோன்றும் பெட்டியில் Device Manager என்பதில் கிளிக் செய்யவும்.
5.      கிளிக் செய்தவுடன் கணினியில் உள்ள அனைத்து டிவைஸ்களும்    அதில்        காட்சியளிக்கும்.
6.       தோன்றும் காட்சியில் Disk Drives என்பதில் டபுள் கிளிக் செய்யவும்.
7.       தோன்றும் கீழ்விரி பட்டியலில் உங்களுடைய பென்டிரைவின்    பெயரைத்        தேடி அதில் டபுள் கிளிக் செய்யவும்.
8.        இப்போது தோன்றும் விண்டோவில் இரண்டாவதாக உள்ள Polices  என்பதைக் கிளிக் செய்து,  Quick Removal (Default) என்பதைக் கிளிக் செய்து  தேர்வு செய்து வெளியேறுங்கள்.

இனி, நீங்கள் ஒவ்வொரு முறையும் பென்டிரைவை USB port-லிருந்து நீக்கும்பொழுதும் Safe Remove கொடுக்கத் தேவையில்லை. உங்களுடைய பென்டிரைவும் எந்த பாதிப்பும் அடையாமல் பாதுகாப்புடன் இருக்கும்.

HOW TO REMOVE REMOVE WRITE PROTECTION IN PENDRIVE ?

HOW TO REMOVE REMOVE WRITE PROTECTION IN PENDRIVE ?  Plug in your pen-drive into your USB 2.0 on your computer.make sure the computer ...